தஞ்சாவூர்: கும்பகோணம் மேம்பாலம் அருகே உள்ள சாந்திநகரைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ரவிச்சந்திரன். இவர் நேற்று (ஜன.27) மாலை தனது வீட்டின் முன், பைக்கை நிறுத்தியுள்ளார். அப்போது சாலை ஓரம் சென்ற நல்ல பாம்பு குட்டி ஒன்று, திடீரென இவரது பைக்கில் ஏறி உள்ளது. இதனைப் பார்த்த ரவிச்சந்திரன், அந்த பாம்பை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால், அதற்குள்ளாக பாம்பு இன்ஜினுள் புகுந்துள்ளது. இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள், பாம்பு இருசக்கர வாகனத்திற்குள் இருப்பதை உறுதி செய்தனர்.
பின்னர் இருசக்கர வாகன பழுது நீக்குபவரை வரவழைத்து, வண்டியின் பாகங்களை ஒவ்வொன்றாக கழட்டினர். தொடர்ந்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, நல்ல பாம்பு குட்டி உயிருடன் மீட்கப்பட்டது. இதனையடுத்து உயிருடன் மீட்ட பாம்பு குட்டியை, தீயணைப்பு படையினர் வனப்பகுதிக்குள் விட்டனர்.
இதையும் படிங்க: ஆத்தி எத்ததண்டி!.. தோல் தொழிற்சாலைக்குள் புகுந்த 3 பாம்புகள்!