சூரியன், சந்திரன், ராகு ஆகிய மூன்று கிரகங்கள் வழிபட்ட திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோயிலில் ராகுபகவான் நாகவல்லி, நாக கன்னி என இரு துணைவியாருடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார்.
சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயிலில் கடை ஞாயிறு பெருவிழாவையொட்டி இன்று காலை கொடியேற்றத்துடன் விழா விமரிசையாகத் தொடங்கியது. முன்னதாக கொடிக் கம்பத்திற்கு பால், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் அபிஷேகமும், இதனைத் தொடர்ந்து நந்தி உருவம் பொறித்த திருக்கொடியினையும் சிவாச்சாரியார்கள் கொடியை ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து தினமும் காலையும், மாலையும் சுவாமி திருவீதி உலாவும் வரும் 14ஆம் தேதி முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருத்தேரோட்டமும் 15ஆம் தேதி பத்தாம் நாள் நிகழ்ச்சியாக பஞ்சமூர்த்திகளின் திருவீதியுலாவும், பின்னர் சூரிய புஷ்கரணியில் தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதையும் படிங்க:
உலகத்தரச் சான்று பெற்ற அரசு மருத்துவமனை - மருத்துவருக்கு குவியும் விருதுகள்!