ETV Bharat / state

சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்த தந்தை - இரு குழந்தைகள் உயிரிழப்பு - father commit suicide thanjavur

தஞ்சாவூர்: இரண்டு பெண் குழந்தைகளுக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு, தந்தையும் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

thanjavur
thanjavur
author img

By

Published : Jun 6, 2020, 7:39 PM IST

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலுள்ள இரண்டாம் புளிக்காட்டைச் சேர்ந்தவர் கதிரவன் (30). கூலி தொழிலாளியான இவர், கடந்த ஏழு வருடங்களுக்கு முன் ராமநாதபுரம் ஆர்.எஸ். மங்களத்தைச் சேர்ந்த சுகன்யா (26) என்பவரைக் காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இந்தத் தம்பதிக்கு வருனிகா ஸ்ரீ (7), ஜனனிகா ஸ்ரீ (5) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக கடந்த ஒரு வருடமாக தன் தாய் வீட்டில் சுகன்யா வசித்துவந்துள்ளார்.

ஊரடங்கால் வேலையிழந்த கதிரவன், குடும்ப பிரச்னை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இரு குழந்தைகளை வைத்துக்கொண்டு சிரமப்பட்டு வந்த அவர், கடந்த 4ஆம் தேதி சாப்பாட்டில் விஷம் கலந்து, அதனை அவரின் இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டு அவரும் சாப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து ஆபத்தான நிலையிலிருந்த மூன்று பேரையும், அக்கம் பக்கம் உள்ளவர்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி இரண்டு குழந்தைகளும் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர்.

கதிரவன் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். இச்சம்பவம் குறித்து சேதுபாவாசத்திரம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: வரதட்சணை கொடுமை: திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.