ETV Bharat / state

நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனையும் நெல்மணிகள்; விவசாயிகள் வேதனை

மழை காரணமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளதால், கொள் முதல் நிலையங்களில் களங்களில் கொட்டிவைத்திருக்கும் நெல் மணிகள் மழையில் நனைந்து வீணாவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Farmers are distressed as the paddy stored at the paddy procurement station gets wet in the rain
நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனையும் நெல்மணிகள்; விவசாயிகள் வேதனை
author img

By

Published : Feb 2, 2023, 4:51 PM IST

நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனையும் நெல்மணிகள்; விவசாயிகள் வேதனை

தஞ்சாவூர்: கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில், இன்று காலை முதல் விட்டு விட்டு லேசான நல்ல மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் கும்பகோணம் அருகேயுள்ள அசூர், கடிச்சம்பாடி, தேவனஞ்சேரி, கல்லூர், அகராத்தூர், வாழ்க்கை, திருநல்லூர், பறட்டை உள்ளிட்ட பல கிராமப்பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள சம்பா நெல் பயிர்கள் மழையில் நனைந்தும், பழு தாங்காமல், வயலிலேயே மழைநீரில் சாய்ந்து சேதமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சேமித்து வைப்பதற்கு போதிய இடவசதி மற்றும் கொட்டகை வசதி இல்லாததாலும் கொள்முதல் நிலையத்தில் நெல்களை மூடி வைப்பதற்கு போதிய அளவிலான தார்பாய்களும் இல்லாததால் விவசாயிகள் நெல் மணிகளை மழையில் இருந்து காப்பாற்ற முடியாமல் கடும் சிரமத்திற்கு உட்பட்டுள்ளனர்.

நெல் கொள்முதல் நிலையத்தில் போதிய இட வசதி இல்லாததால் விவசாயிகள் சாலையோரங்களில் ஆங்காங்கே நெல்லை கொட்டி வைத்துள்ளனர். இரு தினங்களாக காத்திருப்பதால், கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் அனைத்தும் முழுமையாக நனைந்து வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் மழையின் காரணமாக கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதனால் விவசாயிகள் அடுத்த கட்டமாக என்ன செய்வது என வழி தெரியாமல் வேதனையடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.