தஞ்சாவூர் மாவட்டம் உதாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார்(30). இன்று இவர், தனது இருசக்கர வாகனத்தில் பள்ளியக்ரஹாரம் அருகேயுள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்குவந்த கும்பல் இவரை வழிமறித்து ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதில், அவரின் பின் தலையில் பலத்த காயமடைந்ததால், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பின்னர், அந்த கும்பல் அவரது உடலை அருகிலுள்ள புதரில் வீசிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து அவ்வழியே சென்றவர்கள், அவரது உடலைக்கண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், அங்கு விரைந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் விசாரிக்கையில், செல்வகுமாருக்கும், அவரின் ஊரைச் சேர்ந்த மணிகண்டன்(24) என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.
உடனே அவரை பிடித்து விசாரிக்கையில், முன்விரோதம் காரணமாக இவர்தான் கொலை செய்திருப்பது தெரியவந்தது. மேலும், இக்கொலைச் சம்பவத்தில் இன்னும் நான்கு பேருக்கு தொடர்பிருப்பதாக உதாரமங்கலத்தைச் சேர்ந்த ஏசுதாஸ்(25), அஜீத்குமார்(20), அம்மன்பேட்டையைச் சேர்ந்த சிலம்பரசன்(20) மாங்குடியைச் சேர்ந்த ஆனந்த்(20) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: