ETV Bharat / state

தஞ்சையில் குடும்ப பிரச்சினை காரணமாக தாய் - மகள் தற்கொலை.. நடந்தது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2023, 1:09 PM IST

Thanjavur suicide: தஞ்சையில் குடும்ப பிரச்சினை தாய் - மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

family-problems-mother-daughter-committed-suicide-in-kallanai
..கல்லணைக் கால்வாயில் குதித்து தாய் - மகள் தற்கொலை

தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த காசவளநாடு தெக்கூர் பாலம் பகுதியில் கல்லணை கால்வாய் ஆற்றில் நேற்று (நவ.26) ஒரு பெண், சிறுமி ஆகியோரது சடலம் மிதந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கல்லணை கால்வாயில் இறங்கி தண்ணீரில் மிதந்த சடலங்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இவர்கள் இரண்டு பேரின் உடல்களும் சுடிதார் துப்பட்டாவால் சேர்த்து கட்டப்பட்டு இருந்தது. இது குறித்து தஞ்சை தாலுகா போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து இரண்டு பேரின் உடல்களை போலீசார் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கல்லணை கால்வாயில் சடலமாக கிடந்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணையில் கல்லணை சடலமாக கிடந்தவர்கள், தஞ்சை விளார் சாலை தில்லைநகர் சேர்ந்த செந்தில்குமாரின் மனைவி பத்மஜோதி (வயது 38) மற்றும் அவரது இளைய மகள் தீபிகா (15) என தெரியவந்தது. குடும்பப் பிரச்சினை காரணமாக செந்தில்குமாரை விட்டு பிரிந்து சென்ற பத்மஜோதி தனது இளைய மகளுடன் தஞ்சையிலும், செந்தில்குமார் அவரது மூத்த மகளுடன் திருவாரூரிலும் வசித்து வந்துள்ளனர்.

கணவர் மற்றும் மூத்த மகள் பிரிந்து சென்றதால் பத்மஜோதி வாழ்க்கையில் விரக்தி அடைந்தாகவும், இதனால் தனது இளைய மகளுடன் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இது தொடர்பாக தஞ்சை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Suicide is not the solution
தற்கொலை எதற்கும் தீர்வல்ல

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது, குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக பவானிசாகர் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த தண்ணீர் கல்லணைக்கு வருவதால் அங்கிருந்து காவிரி வெண்ணாறு, கல்லணை கால்வாய், ஆகியவற்றில் பிரித்து அனுப்பப்படுகிறது.

அதன்படி நேற்று காலை நிலவரப்படி கல்லணை கால்வாயில் வினாடிக்கு 1500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கல்லணை கால்வாயில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் ஒரே நேரத்தில் கல்லணை ஆற்றில் தாய் மற்றும் மகள் உயிரை மாய்த்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பெருந்துறை சிப்காட் விவகாரம்: "தண்ணீர் மட்டும் அல்ல, காற்றும் மாசடைந்துள்ளது" - எம்எல்ஏ ஈஸ்வரன் குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.