மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஆசை மணிக்கு, மாநில கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்..மணியன் கும்பகோணம் பள்ளி வாசலில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓ.எஸ்.மணியன், "சமீபகாலமாக டிடிவி தினகரன் அணியிலிருந்து ஏராளமானோர் பல்வேறு கட்சிகளுக்குச் சென்றுவிட்ட நிலையில், டிடிவி அணியோடு அதிமுக இணைவதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக கூறுவது சரியானதில்லை .
ஒவ்வொருவரும் அவரவர் கருத்துகளைக் கூறலாம். அதனடிப்படையில் மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
மேலும், தினகரன் தரப்பில் உள்ளவர்கள் எல்லாம் வெவ்வேறு இடங்களுக்கு சென்றுவிட்ட நிலையில் தேர்தல் முடிவுக்குப் பிறகு அனைவரும் சென்றுவிடுவார்கள். பிறகு எதுக்கு தினகரன். அவர் அங்கேயே இருந்து அக்கட்சியை நடத்தட்டும்" என கிண்டலாக தெரிவித்துள்ளார்.