தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தொகுதி எம்.எல்.ஏ.வான கோவி செழியன். தற்போதைய திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசின் தலைமை கொறடாவாக உள்ளார். இவரது அலுவலகம், கும்பகோணம் மயிலாடுதுறை சாலை கோவிந்தபுரம் அருகேயுள்ள திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது.
இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி இரவு அலுவலகத்தைப் பூட்டி சென்றுவிட்டு நேற்று 24ஆம் தேதி காலை அலுவலகம் வந்து பார்த்த அலுவலக உதவியாளர் அன்பழகன், அலுவலகத்தின் பின்புறம் இருந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள நீர்மூழ்கி மோட்டார் திருடுபோயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து இது குறித்து திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து போலீசார் நீர் மூழ்கி மோட்டார் திருடப்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டு திருடிச்சென்ற கும்பலைத்தீவிரமாகத் தேடி வருகின்றனர். அரசு தலைமை கொறடா அலுவலகத்தில் நீர் மூழ்கி மின் மோட்டார் திருடப்பட்ட சம்பவம் திருவிடைமருதூர் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கும்மிடிப்பூண்டி அருகே காணாமல்போன சிறுமி ஏரியில் சடலமாக மீட்பு.. திடுக்கிடும் தகவல்கள்...