ETV Bharat / state

’சொந்தக்காலில் நிற்கும் விவசாயிகளை ஒரு போதும் ஸ்டாலினால் வெல்ல முடியாது’ - முதலமைச்சர்

தஞ்சை: சொந்தக்காலில் நிற்கும் விவசாயிகளை ஒரு போதும் ஸ்டாலினால் போராடி வெல்ல முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

edappaddi panaliswami criticised MK Stalin

author img

By

Published : Feb 26, 2020, 1:40 PM IST

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைத்திலிங்கம் இல்ல திருமண விழா தஞ்சை மகாராஜா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் இத்திருமண விழா நடைபெற்றது. இந்தத் திருமண விழாவில் தமிழ்நாடு அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் திரளாகக் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, ”வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும். அப்படியாக மக்களாகிய உங்களால் முதலமைச்சராகும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்துள்ளது. நாள்தோறும் எங்களைப் பற்றி நாங்கள் விளம்பரம் செய்துகொள்ள தேவையே இல்லை; ஸ்டாலினே அதைச் செய்கிறார். ஸ்டாலினுக்கு விவசாயி என்றாலே பிடிப்பதில்லை. நான் விவசாயி என்று சொன்னால், நீ விவசாயி இல்லை என்று ஸ்டாலின் கூறுகிறார். அவருக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை. நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அப்போது விவசாயி என்றுதானே சொல்லமுடியும்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

விவசாயியாக இருப்பது பெருமைக்குரியது. அடுத்தவரிடம் கையேந்தாதவர்கள் விவசாயிகள். மற்றவர்களெல்லாம் மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டும். விவசாயிகள் மட்டும்தான் சொந்தக் காலில் நிற்கிறார்கள். அடுத்தவரிடம் கையேந்தாத ஒரே கூட்டம் நாங்கள். சொந்தக்காலில் நிற்கும் விவசாயிகளை எதிர்த்துப் போராடி ஸ்டாலினால் வெல்ல முடியாது. இரவு பகல் பாராமல், மழைவெயில் என பாராமல் உழைப்பவர்கள் விவசாயிகள். அவர்களை ஸ்டாலின் கொச்சைப்படுத்த வேண்டாம். பச்சைத் துண்டு போட்டவர்கள் எல்லாம் விவசாயி இல்லை என ஸ்டாலின் சொல்கிறார், பச்சைத் துண்டு போடுவதற்கும் விவசாயி என்கிற தகுதி வேண்டும் என்று நான் கூறுகிறேன்” என்றார்.

இதையும் படிங்க: டெல்லி வன்முறை: இயல்பு நிலையை மீட்க ஸ்டாலின் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.