தஞ்சையில் நிலங்களை மாசுபடுத்தும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது.
இதில் அனைத்து விவசாய சங்கத்தினர், திராவிட முன்னேற்றக் கழகத்தினர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இப்போராட்டத்தில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், திருக்கடையூர் சட்டமன்ற உறுப்பினர் செழியன், தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க்:காப்பீட்டுத் தொகையை வழங்காத அலுவலர்களைக் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்