தஞ்சாவூரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கரோனா தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தொடங்கிவைத்தார்.
அப்போது அவருடன் மாநகராட்சி, சுகாதாரத் துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர். இந்தப் பேரணியானது ரயில் நிலையத்தில் தொடங்கி பழைய பேருந்து நிலையம் வழியாக காந்திஜி சாலையில் முடிவடைந்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தெரிவித்ததாவது, "தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்று தற்போது குறைந்துள்ளது. தீபாவளி கூட்ட நெரிசலால் கரோனா இரண்டாம் அலை பரவாமல் தடுத்திட வேண்டும்.
பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே செல்லக் கூடாது. வணிக நிறுவனங்கள், துணிக் கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கிட வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: முகக்கவசம் விழிப்புணர்வு: தருமபுரி ஆட்சியர் திடீர் ஆய்வு