ETV Bharat / state

பழங்குடியின மக்களின் வீட்டிற்கே சென்று சாதி சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர்...!

தஞ்சாவூரில் இருளர் மற்றும் ஆதியன்குடி பழங்குடி இன மக்களுக்கு, பழங்குடி இன சாதி சான்றிதழை அவர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

பழங்குடியின மக்களின் வீட்டிற்கே சென்று சாதி சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

author img

By

Published : Oct 26, 2022, 7:59 PM IST

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே சோழபுரத்தை அடுத்துள்ள பனங்குடம் கிராமத்தில் இருளர் இன பழங்குடி மக்கள் பலர் வசித்து வருகின்றனர். இது போல தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களுக்குப் பழங்குடி இன சாதி சான்றிதழ் வேண்டுமென அரசிற்குக் கோரிக்கைகள் விடுத்துக் காத்திருந்த நிலையில், தற்போது இவர்களுக்குப் பழங்குடி இன மக்களுக்கான சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், இன்று மட்டும் பனங்குடம் கிராமத்தில் உள்ள பழங்குடியினர் 105 நபர்களுக்கான சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவர்கள் வீடுகளுக்கே நேரில் சென்று வழங்கினார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 250 குடும்பங்களுக்கு இருளர் மற்றும் ஆதியன்குடி மக்களுக்குப் பழங்குடி இன சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார மேம்பாட்டிற்காக இவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கும்பகோணம் கோட்டாட்சியர் லதா உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

பழங்குடியின மக்களின் வீட்டிற்கே சென்று சாதி சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

இதையும் படிங்க: பழங்குடியினர் சாதி சான்றிதழ் மெய்த்தன்மை விசாரணை பிரிவில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.