சென்னையில் காவல் துறையினர் இருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து தஞ்சை பிள்ளையார்பட்டியில் உள்ள ஆயுதப்படை காவலர்கள் குடியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதிகளில் சிறப்பு ஐஜி சாரங்கன் உத்தரவின்பேரில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்வரன், 'இரண்டு நாள்களுக்கு ஒருமுறை கிருமி நாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் காவலர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது' என்றார்.
இதையும் படிங்க...கத்திக் குத்து வாங்கிய காவலர்கள் - பிடிபட்ட கஞ்சா வியாபாரி