ETV Bharat / state

டெல்டாவில் நெடுஞ்சாலையில் நெல் உலர்த்தும் அவலம் - உலர் களம் அமைத்துத் தர விவசாயிகள் கோரிக்கை!

தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நெல்லை உலர்த்த இட வசதி இல்லாததால் விவசாயிகள் நெடுஞ்சாலையில் நெல் உலர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நெல்லை உலர்த்த களம் அமைத்துத் தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FARMER
நெல்
author img

By

Published : Jun 21, 2023, 6:41 PM IST

உலர் களம் அமைத்துத் தர விவசாயிகள் கோரிக்கை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்தில் சாலியமங்கலம், பூண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 2,500 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு குறுவை, சம்பா மற்றும் கோடை என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் நெல்லை உலர்த்துவதற்கு உலர் கள வசதி இல்லாததாலும், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் போதுமான இடவசதியோ, களமோ இல்லாததாலும், விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கொட்டி உலர்த்துகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலையில் நெல்லை காய வைப்பதால், வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது. அதோடு, வாகனங்கள் வரும் சாலையில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நெல்லை உலர்த்தும் பணியில் ஈடுபடுவதால், அவர்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே, அம்மாபேட்டை, சாலியமங்கலம், பூண்டி உள்பட அனைத்து கிராமங்களிலும் நெல் உலர்த்த உலர் களம் அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

முன்னதாக, சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 12ஆம் தேதி தண்ணீரை திறந்து வைத்தார். இந்த தண்ணீர் தஞ்சை மாவட்டம் கல்லணை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 16ஆம் தேதி, காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அமைச்சர் கே.என்.நேரு, எம்பி பழநிமாணிக்கம் ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர்.

தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்காக இந்த தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கல்லணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் தஞ்சை மாவட்டத்தில் 1,08,951 ஏக்கர், திருவாரூர் மாவட்டத்தில் 92,214 ஏக்கர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 22,805 ஏக்கர், மயிலாடுதுறை மாவட்டத்தில் 93,750 ஏக்கர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் 24,976 ஏக்கர் என மொத்தம் 3,42,696 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்கள் பாசனத்திற்காக காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் கொள்ளிடம் ஆகிய ஆறுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டன. காவிரி ஆற்றில் தண்ணீர் வந்ததால் விவசாயிகள் குறுவை சாகுபடி பணியை தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: Kallanai Dam: டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு.. மலர் தூவி திறந்து வைத்த அமைச்சர் கே.என்.நேரு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.