தஞ்சாவூர்: கும்பகோணத்தில் அரசு மருத்துவமனை சாலையில் தனியார் உணவகம் இயங்கிவருகிறது. பெரும்பாலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளிகளுக்கு இங்கு உணவு வாங்கிச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், இந்த உணவகத்தில் வாங்கப்பட்ட இட்லியில் இறந்த தவளை இருந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இச்சம்பவத்தையடுத்து சுகாதாரத் துறையினர் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:Rain Update: இன்று 21 மாவட்டங்களில் மழை