கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வம், இவருக்கு சொந்தமாக ஒரு வீடு, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள நாடியம் கிராமத்தில் உள்ளது. இங்கு செல்வம் என்பவர் காவல் பணி செய்து வருகிறார்.
இந்நிலையில், இன்று காலை செல்வம் வீட்டைச் சுற்றிப் பார்த்தபோது வீட்டின் பின்பக்கக்கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, வீட்டில் உள்ள பொருட்கள் சிதறிய நிலையில் சிசிடிவி கேமராக்கள் உடைக்கப்பட்டு தண்ணீர் தொட்டியில் போடப்பட்டு இருந்தது.
உடனடியாக அவர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள் சோதனை செய்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 55 சவரன் தங்கநகை அடையாளம் தெரியாத நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, மோப்பநாய் வரவழைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் ஒருவரின் சொந்த இல்லத்தில் நடைபெற்றுள்ள இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ஆட்டோவை திருடிய சவாரி செய்த நபர்: சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை