ETV Bharat / state

“அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்த பசுமாடு“- பரவசப்படுத்தும் காணொலி! - ஆச்சரியப்படுத்தும் காணொலி

தஞ்சாவூர்: செட்டிமண்டபம் புறவழிச்சாலையில் உள்ள சுயம்பு மகா சக்தி கோயிலில் அம்மனுக்கு பசுமாடு தானாகவே பால் சுரந்து அபிஷேகம் செய்த சம்பவம், காண்போருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்த பசுமாடு
அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்த பசுமாடு
author img

By

Published : Aug 19, 2020, 7:45 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் செட்டிமண்டபம் புறவழிச்சாலையில் சுயம்பு மகா சக்தி கோயில் அமைந்துள்ளது.

இக்கோயில் கருவறையில் உள்ள அம்மன், சுயம்பு வடிவில் தோன்றிய அம்மனாகும். அம்மனுக்கு பெருமை சேர்க்கும் ஆடி மாத கடைவெள்ளியை முன்னிட்டு, நேற்று முன் தினம் சந்தன காப்பு அலங்காரம் செய்யபட்டது.

வழக்கமாக இவ்வலங்காரம் மூன்று நாள் வரை பக்தர்களின் தரிசனத்திற்காக மாற்றாமல் அப்படியே வைக்கப்பட்டிருக்கும்.

மேலும் இவ்வளாகத்தில் பல பசுக்கள் பராமரிக்கப்படுகிறது. இதில் செண்பகம் என்ற பசுவின் பால் தினமும் அபிஷேகத்திற்காக உபயோகிக்கப்படுகிறது.

நேற்று (ஆக.18) சந்தனக்காப்பு களைக்காததால் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யவில்லை.

இதையடுத்து கோயில் அர்ச்சகர் அம்மனின் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். அப்போது செண்பகம் பசு தானாக கோயில் கருவறைக்குச் சென்று, இயற்கையாக பாலைச் சுறந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தது.

அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்த பசுமாடு

இந்த நிகழ்வைக் கண்ட கோயில் அர்ச்சகர் தனது செல்போனில் அதனை காணொலியாக பதிவு செய்துள்ளார். தற்போது இந்தக் காணொலியானது சமூக வலைதளங்களில் வைரலாகி, காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க:சேலத்தில் ஏரியில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் பலி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.