தஞ்சாவூர் மாவட்டம் கண்ணந்தங்குடியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் மணமக்கள் கரோனா அச்சுறுத்தலிலிருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பாக திருமண விழாவில் பங்கேற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மணமக்களுக்கு நேற்றைய தினம் திருமணம் நடைபெற்றது. சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டதையடுத்து, அதிகளவில் உறவினர்கள் கூடாமல் நெருங்கிய உறவினர்கள் மட்டும் திருமண விழாவில் பங்கேற்றனர்.
மணமக்கள் தங்களது திருமணத்தின்போது முகக்கவசம் அணிந்திருந்தனர். மேலும், தங்களது திருமண நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் முகக் கவசங்கள் வழங்கி கரோனா வைரசிலிருந்து, தற்காத்துக்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதையும் படிங்க: கரோனா: ஆடம்பரமின்றி எளிமையாக நடந்த 16 திருமணங்கள்