தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை கடல் பகுதியான தம்பிக்கோட்டை, மறவக்காடு, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் உள்ள நிலங்களில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தொடர்ந்து ஜனவரி மாதம் முதல் உப்பு உற்பத்திக்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது உப்பு வாரும் தருவாயில் இருக்கிறது.
இதற்கிடையே கடந்த சில நாள்களாக இடையிடையே தஞ்சை கடற்பகுதியில் விட்டு விட்டு இரவு பகல் பாராமல் மழை பெய்து வருகிறது. இதனால் உப்பு வாரும் தருவாயில் உள்ள உப்பளங்களுக்குள் மழைநீர் தேங்கியுள்ளது. இது உப்பு உற்பத்தியாளர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: