ETV Bharat / state

மந்திரிப்பதாகக் கூறி நகையை அபேஸ் செய்த கும்பல்.! 3 பேர் அதிரடி கைது.. - நகை திருட்டு

கும்பகோணம் அருகே திருமணம் வாழ்க்கை அமைய மந்திரிப்பதாகக் கூறி ஒரு சவரன் நகையை திருடி விட்டு, அதற்கு பதில் கல் உப்பை பேப்பரில் மடித்து கொடுத்த தப்பியோடிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.

3 பேர் அதிரடி கைது
3 பேர் அதிரடி கைது
author img

By

Published : Feb 4, 2023, 11:38 AM IST

Updated : Feb 4, 2023, 4:01 PM IST

தஞ்சாவூர்: கும்பகோணம் செக்காங்கண்ணி பகுதியில் உள்ள எழில் நகரை சேர்ந்தவர் மும்தாஜ் பேகம். இவரது வீட்டிற்கு குறி சொல்வதற்காக ஒரு பெண் உள்பட மூன்று பேர் சென்றுள்ளனர். அப்போது மும்தாஜ் இடம் தங்க நகைகளை வைத்து மந்திரித்தால், தங்களது பெண் திருமணம் ஆகி செல்லும் வீட்டில் வாழ்க்கை நன்றாக இருக்கும் எனக் கூறியுள்ளனர்.

இதனை கேட்ட மும்தாஜ், ஒன்னரை சவரன் தங்க சங்கிலியை அவர்களிடம் கொடுத்துள்ளார். அதனை வாங்கிக் கொண்டு மந்திரிப்பதாக கூறிய அவர்கள், ஒரு மணி நேரத்துக்கு பின் எழுமிச்சம் பழம் மற்றும் ஒரு பொட்டலம் ஆகியவற்றை கொடுத்து 24 மணி நேரம் கழித்து பொட்டலத்தை பிரித்துப் பார்க்க வேண்டும் என கூறியுள்ளனர்.

அந்த பொட்டலத்துக்குள் அவர் கொடுத்த தங்க நகை இருப்பதாகவும், 24 மணி நேரம் கழித்து தான் அதனை திறக்க வேண்டும் எனவும், அப்போது தான் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறியுள்ளனர். இவர்கள் கூறியதை கேட்டு சந்தேகம் அடைந்த மும்தாஜ் பேகம், மந்திரித்து கொடுத்த பேப்பரை பிரித்து பார்த்த போது தங்க சங்கிலிக்கு பதில் கல் உப்பு இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த மும்தாஜ், அவர்களுக்கு தெரியாமல் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்திற்கு ரகசியமாக தகவல் கொடுத்துள்ளார். தகவலின் அடிப்படையில், துரிதமாக செயல்பட்ட மேற்கு காவல் ஆய்வாளர் பேபி தலைமையிலான காவல்துறையினர் மும்தாஜ் பேகம் வீட்டில் இருந்த மூன்று பேரையும் கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், மோசடியில் ஈடுபட்டது கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த ரேணுகாதேவி, மகேஸ்வரன் மற்றும் விஜய் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்கள் மூவரையும் நீதிமன்றம் முன் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: IAS அதிகாரி போல் நடித்து ரூ.16 லட்சம் மோசடி - 5 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய ஆசாமி!

Last Updated : Feb 4, 2023, 4:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.