ETV Bharat / state

சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயிலில் தேரோட்ட விழா.. ஆச்சிரியத்தில் ஆழ்த்திய 10ஆம் வகுப்பு மாணவி!

Karthigai Deepam 2023: கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு, கும்பகோணம் சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயிலில் தேரோட்ட விழா நடைபெற்றது.

சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில் தேரோட்ட விழா

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2023, 12:55 PM IST

சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில் தேரோட்ட விழா

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில், தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு கொண்டதாக விளங்குகிறது, இத்திருக்கோயில்.

தந்தை சிவபெருமானுக்கு குருவாக இருந்து, உபதேசம் செய்து, சுவாமிக்கே நாதன் ஆனதால் இத்தலத்தில் முருகப்பெருமான், சுவாமிநாதசுவாமி என போற்றப்படுவதாக கருதப்படுகிறது. மேலும், இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை பெருவிழா 12 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டின் கார்த்திகை பெருவிழா கடந்த நவ.18ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

கார்த்திகை தீபத்திருவிழாவினை முன்னிட்டு நாள்தோறும் காலையில் படிச்சட்டத்திலும், இரவு பல்வேறு வாகனங்களிலும் சுவாமி வீதியுலா நடைபெற்று, விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 9ஆம் நாள் திருக்கார்த்திகை தினமான இன்று (நவ.25) அதிகாலை, மூலவர் சுவாமிநாதசுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து, சுவாமி முருகனுக்கு தங்கக் கவசம், வைரவேல் அணிவிக்கப்பட்டது. இதனை அடுத்து பல்லாயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து, மூலவர் சுவாமிநாதசுவாமியை நெய் தீபங்கள் ஏற்றியும், அர்ச்சனைகள் செய்தும் தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து, இன்று (நவ.26) காலை வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி விசேஷ மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருத்தேருக்கு எழுந்தருள, இந்து அறநிலையத்துறை சுவாமி திருக்கோயில் துணை ஆணையர் உமாதேவி வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

அதனை அடுத்து, ஏராளமான பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இத்தேரோட்டத்தில் 3 தலைமுறைகளாக தேரோட்டப் பணிகளில் ஈடுபட்டு வரும் சக்கரபாணி கொத்தனர் பேத்தியும், கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பள்ளியின் 10ஆம் வகுப்பு மாணவியுமான பத்மஸ்ரீ, தேர்கட்டை போடும் பணிகளில் தந்தை ரமேஷ்-க்கு உதவியாக செயல்பட்டது அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.

மேலும், இன்று இரவு கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றுதலும், பின்னர் தங்கமயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும் முடிந்த பிறகு, 10ஆம் நாளான திங்கட்கிழமை காவிரியாற்றில் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: குமரியில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா; திரளி இலையில் கொழுக்கட்டை.. சூடுபிடிக்கும் அகல் விளக்குகள் விற்பனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.