தஞ்சாவூர்: காவிரி பிரச்னையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய நீரை தர மறுக்கும் கர்நாடகா அரசைக் கண்டித்தும், உடனடியாக காவிரியில் நீர் திறந்து விட மத்திய அரசு கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரியும், காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று (அக்.11) கடை அடைப்பு போராட்டம் மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டமும் காவிரி படுகைப் பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
-
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி தமிழகத்திற்கு போதிய தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசைக் கண்டித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தஞ்சையில் நடைபெற்ற முழு அடைப்பு #CauveryWater pic.twitter.com/nuSYWOQucS
— CPIM Tamilnadu (@tncpim) October 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி தமிழகத்திற்கு போதிய தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசைக் கண்டித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தஞ்சையில் நடைபெற்ற முழு அடைப்பு #CauveryWater pic.twitter.com/nuSYWOQucS
— CPIM Tamilnadu (@tncpim) October 11, 2023காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி தமிழகத்திற்கு போதிய தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசைக் கண்டித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தஞ்சையில் நடைபெற்ற முழு அடைப்பு #CauveryWater pic.twitter.com/nuSYWOQucS
— CPIM Tamilnadu (@tncpim) October 11, 2023
அதன்படி, கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஏரளாமான பெண்கள் உள்பட திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி விவசாய சங்கம், வணிக சங்க நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் மாவட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் கீர்த்திவாசன் தலைமையிலான போலீசார் கைது செய்து உடனடியாக அப்புறப்படுத்தினர்.
மேலும், முக்கிய வீதிகளான ஹாஜியார் தெரு, ஆயுகுளம் சாலை, நாகேஸ்வரன் வடக்கு வீதி, நாகேஸ்வரன் தெற்கு வீதி, பெரிய கடை வீதி, பூக்கடை தெரு, ராமசாமி கோயில் சன்னதி, மடத்து தெரு, கும்பேஸ்வரர் வடக்கு வீதி, கீழ வீதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் கும்பகோணம் சுற்று வட்டாரப் பகுதிகளான தாராசுரம், பாபநாசம், அய்யம்பேட்டை நாச்சியார்கோவில், சோழபுரம், சுவாமிமலை, பட்டீஸ்வரம், திருநாகேஸ்வரம், திருபுவனம், திருப்பனந்தாள், பந்தநல்லூர், அணைக்கரை, ஆடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு, கடை அடைப்பு போராட்டம் முழுமையாக நடைபெறுகிறது.
இதையும் படிங்க:“பெருந்தலைவர் காமராஜர் திட்டத்தின் கீழ் நடவடிக்கை” - நாகர்கோவில் அரசுக் கல்லூரி கட்டிடம் கட்டுவது தொடர்பாக அமைச்சர் பொன்முடி பதில்!