தஞ்சாவூர் மாவட்டம், பூண்டி மேல தெருவைச் சேர்ந்தவர் ராகுல்(22). இவர் லட்சுமணன் என்பவர் வீட்டில் பணத்தை திருடியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஆறு பேர் கொண்ட கும்பல் ராகுலின் கண்களைக் கட்டி விக்கி என்பவரின் தோப்பிற்கு அழைத்துச் சென்று இரும்பு கம்பியால் உடல், கை, கால் ஆகிய பகுதிகளில் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்து ராகுலின் நண்பர்களுக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பியுள்ளனர். இதையறிந்து அவமானம் தாங்க முடியாத ராகுல் மனமுடைந்து எலிமருந்து சாப்பிட்ட நிலையில், தற்போது தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இது குறித்து ராகுல் அளித்த புகாரின் பெயரில் விக்கி, விக்கியின் அண்ணன், பார்த்திபன், லட்சுமணன், சரத், ஐயப்பன் ஆகிய 6 பேர் மீது அம்மாபேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆறு பேர் கொண்ட கும்பல் ராகுலை தாக்கும் பதறவைக்கும் காணொலிக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுதியுள்ளது.
இதையும் படிங்க: சும்மா சுத்தி சுத்தி வீடு கட்டி உறி அடித்த அமைச்சர்!