ETV Bharat / state

பூதலூரில் மின் கம்பி அறுந்து விழுந்து 5 பசுக்கள் பலி!

தஞ்சாவூர் : பூதலூர் அருகே மின்கம்பி அறுந்து விழுந்த விபத்தில் ஐந்து பசுக்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியாயின.

budalur
budalur
author img

By

Published : May 14, 2020, 9:21 AM IST

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே கோட்ரப்பட்டி பகுதியில் அப்பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், பிரான்சிஸ், பீட்டர், அன்புரோஸ், ரிச்சர்ட் ஆகியோரின் கறவை மாடுகள் நேற்று வயலில் மேய்ந்து கொண்டிருந்தன.

அப்போது, எதிர்பாராத விதமாக அவ்வழியாகச் செல்லும் மின் கம்பி அறுந்து விழுந்ததில், ஐந்து மாடுகள் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.

மாடுகள் இறந்து கிடந்ததைப் பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கிராம நிர்வாக அலுவலர், வருவாய்த் துறை அலுவலர், மருத்துவர் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

budalur
budalur

இதையடுத்து, பூதலூர் வட்டாட்சியர் சிவக்குமார் கூறுகையில், "ஐந்து மாடுகளுக்கும் உரிய நிவாரணத் தொகை கிடைக்க ஆவன செய்யப்படும். மாடுகளின் உரிமையாளர்களுக்கு எங்களது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அந்த மின் கம்பங்களை உடனடியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க : 'பழக்கடைகளை சேதப்படுத்திய ஆணையர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?' - மனித உரிமை ஆணையம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.