ETV Bharat / state

மது போதையில் அண்ணனை கத்தியால் குத்திய தம்பி கைது! - காவல்துறையினர் விசாரணை

தஞ்சை: திருக்காட்டுப்பள்ளி அருகே அண்ணனை கத்தியால் குத்திய தம்பியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் .

Brother arrested for stabbing brother
Brother arrested for stabbing brother
author img

By

Published : Dec 2, 2020, 9:42 PM IST

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேவுள்ள வரகூர் ரைஸ்மில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ரவிச்சந்திரன் (31). இவரது தம்பி இந்திரன்(27). இந்நிலையில் இந்திரன் கடன் வாங்கி செலவு செய்துவிட்டு, அதை கட்டாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடன் கொடுத்தவர்கள் ரவிச்சந்திரனிடம் கடன் தொகையை கேட்டுள்ளனர்.

இதுகுறித்து ரவிச்சந்திரன், இந்திரனிடம் கேட்டுள்ளார். அப்போது மது போதையிலிருந்த இந்திரன், அண்ணன் என்றும் பார்க்காமல் ரவிச்சந்திரனை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். மேலும், அதை தடுக்க வந்த ரவிச்சந்திரன் மச்சினன் நல்லேந்திரனையும் கத்தியால் தாக்கியுள்ளார்.

இதில் இருவரும் படுகாயமடைந்து, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி காவல்நிலையத்தில் ரவிச்சந்திரன் புகார் அளித்தார் . புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்டம்: மூன்றாம் வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.