ETV Bharat / state

தஞ்சையில் நிலத்தகராறில் 8 பேருக்கு அரிவாள் வெட்டு - தஞ்சாவூர் அண்மைச் செய்திகள்

நிலத்தகராறு தொடர்பாக இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில், எட்டு பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. தலைமறைவான அரசியல் பிரமுகர் உள்ளிட்ட சகோதரர்கள் இருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

அரிவாள் வெட்டு
அரிவாள் வெட்டு
author img

By

Published : Aug 5, 2021, 10:40 PM IST

தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகே பொய்யுண்டார் கோட்டையில், வீரனார்கோயில் அமைந்துள்ளது.

அதே பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன்கள் சின்னராசா, பாக்கியராஜா. பாக்கியராஜா, தமிழ்நாடு ஆதி திராவிடர் முன்னேற்றக் கழக தஞ்சை மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்து வருகிறார்.

கோயிலும், அது அமைந்துள்ள இடமும் தனக்குச் சொந்தமானது என பழனிவேல் தரப்பினர் கூறி வந்துள்ளனர். மேலும் அதற்குரிய ஆவணங்களும், தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால், மற்றொரு தரப்பினரோ கோயில் ஊருக்கு பொதுவானது எனக் கூறி வந்துள்ளனர்.

நிலத்தகராறு தொடர்பான காணொலி

நில அளவீட்டை தடுத்து நிறுத்தி வாக்குவாதம்

இந்நிலையில் பொய்யுண்டார் கோட்டை கிராம நிர்வாக அலுவலர், நில அளவீட்டாளர் உள்ளிட்டோர் இன்று (ஆக.5) பிரச்னைக்குரிய இடத்தை அளவீடு செய்துள்ளனர். அப்போது அங்கு வந்த சின்னராசு, பாக்கியராஜா இருவரும் நில அளவீட்டை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது ஆத்திரம் அடைந்த சகோதரர்கள் இருவரும், மறைத்து வைத்திருந்த அரிவாளால் அங்கிருந்தவர்களை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் எதிர் தரப்பைச் சேர்ந்த ஜெய்சங்கர், பாலா, பானுமதி, ராஜாத்தி உள்ளிட்ட 8 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஒரத்தநாடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சகோதரர்கள் இருவரையும் தேடி வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இதையும் படிங்க: குழந்தையைப் பிரசவித்த மறுநாளே கரோனாவால் உயிரிழந்த தலைமைக் காவலர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.