ETV Bharat / state

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு பெட்டிகள் கொண்டு செல்லும் பணி தீவிரம்

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுவதையொட்டி பல மாவட்டங்களிலுள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன.

author img

By

Published : Dec 30, 2019, 11:11 AM IST

Ballot boxes are ready
Ballot boxes are ready

தேனி: போடி ஒன்றியத்திற்குட்பட்ட டாப் ஸ்டேசன், சென்ட்ரல் ஸ்டேசன், மாங்காய்பள்ளம், புல்லனூர், மேல்முட்டம், கீழ்முட்டம், கேளையாட்டுப்பள்ளம், முதுவார்க்குடி, பச்சையாத்துக்கானல் உள்ளிட்ட மலைக்கிராமங்களுக்கு குரங்கணியில் இருந்து 12 கி.மீ. தூரம் குதிரைகள் மூலம் வாக்குப்பதிவு பெட்டிகள் எடுத்துச்செல்லப்பட்டன.

கோவை: சூலூர் ஒன்றிய ஊரக உள்ளாட்சிப் பகுதியிலுள்ள 143 வாக்குச்சாவடிகளுக்கும், சுல்தான்பேட்டை பகுதியிலுள்ள 120 வாக்குச்சாவடிகளுக்கும் சூலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பெட்டி, பூத் ஸ்லிப், வாக்குச்சீட்டு போன்ற பல்வேறு உபகரணங்கள் அனுப்பும் பணியை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

வாக்குப்பதிவு பெட்டிகள் கொண்டு செல்லும் பணி

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு வாக்குப்பெட்டிகளை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இதையொட்டி பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சரியாக இரண்டு மணியளவில் 189 வாக்குச்சாவடிகளுக்கு 16 வேன்களில் வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன.

சேலம்: எட்டு ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பெட்டிகள், மை பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் உள்ளிட்ட பொருள்கள் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு காவல்துறை பாதுகாப்போடு அனுப்பி வைக்கப்பட்டன.

இரண்டாம் கட்டமாக நடைபெறும் இந்தத் தேர்தலில் 6 லட்சத்து 68 ஆயிரத்து 779 பேர் வாக்களிக்கவுள்ளனர். இதற்காக 1173 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் பணிகளில் 9,500 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ballot-boxes-are-ready

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை ஒன்றியம் 17 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு பொதுமக்கள் வாக்களிப்பதற்காக 246 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் ஓட்டுச்சீட்டுகள், மை பெட்டிகள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கும் பணி மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. நண்பகல் இரண்டு மணியளவில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜோதி முன்னிலையில் ஓட்டுப் பெட்டிகள், ஓட்டுப் பெட்டிகள் ஏற்றப்பட்ட வாகனங்களுக்கு சிறப்புப் பூஜை செய்யப்பட்டது.

ராமநாதபுரம்: இரண்டாம்கட்ட வாக்குப்பதிவிற்குத் தேவையான வாக்காளர்கள் பட்டியல் வாக்குப்பெட்டி, வாக்குச்சீட்டுகள் முத்திரை, மை பெட்டிகள், தேர்தல் படிவங்கள் உள்ளிட்ட மொத்தம் 72 வகையான பொருள்களை அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர் குழுக்கள் மூலமாக காவல் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் ஆய்வு செய்தார்.

இதையும் படிங்க: 'மாணவர்களைத் தூண்டிவிட்டு பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் திமுக...!'

Intro:மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஓட்டுச்சீட்டு மற்றும் பெட்டிகள் ஏற்றிய வாகனங்களுக்கு திருஷ்டி பூசணிக்காய் உடைத்து சிறப்பு வழிபாடு நடத்தி வாக்குச்சாவடி மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது:-

Body:தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டாவது கட்டமாக நாளை 30ம் தேதி நடக்கிறது. இதில் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 402 வாக்காளர்கள் உள்ளனர். உள்ளாட்சியில் ஊராட்சித் தலைவர் வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் என்று ஒரு வாக்காளர் 4 வாக்குகள் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு பதவிக்கும் ஒவ்வொரு நிறம் என்ற வகையில் 4 நிறங்களில் வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு வாக்குப்பதிவு நடக்கும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மயிலாடுதுறை ஒன்றியத்தில் 17 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பொதுமக்கள் வாக்களிப்பதற்காக 246 பூத்துகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பூத்துகளுக்கும் ஓட்டுச் சீட்டுகள்,மை, வாக்காளர்கள் பட்டியல், ஓட்டுப்பெட்டி ஆகியவை அனுப்பி வைக்கும் பணி மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. மதியம் 12 மணிக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்புவதாக கூறப்பட்டது. ஆனால், எமகண்டம் ஆரம்பித்ததால் மதியம் 1.30 மணிக்கு பிறகு வாக்குப்பெட்டிகள் அனுப்பப்படும் என்று கூறினர். அதன்படி மதியம் 2 மணி அளவில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜோதி மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ஓட்டுப் பெட்டிகள் மற்றும் ஓட்டுப் பெட்டிகளை ஏற்றப்பட்ட வாகனங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தேர்தல் அமைதியான முறையில் நடக்க வேண்டி திருஷ்டி பூசணிக்காய் உடைத்து அதன் பின்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. ஓட்டுப் பெட்டிகள், வாக்கு சீட்டுகள் ஏற்றிச் செல்லப்பட்ட வாகனங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.