ETV Bharat / state

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வழக்கு: தனி நீதிபதியின் உத்தரவு ரத்து - Madurai branch of the High Court

மதுரை: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தராக பாலசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டது செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்துசெய்து, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்
author img

By

Published : Mar 24, 2021, 7:19 AM IST

தஞ்சாவூரைச் சேர்ந்த சேர்ந்த பேராசிரியர் ரவீந்திரன் என்பவர், ”தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தராக பாலசுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது நியமனத்தில் விதி மீறல் உள்ளது. உரிய கல்வித்தகுதி இன்றி அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளின்படி அல்லாமல், விதிகளை மீறி அவரது நியமனம் நடைபெற்றுள்ளது. எனவே அவர் நியமனத்தை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும்' எனக் கோரி முன்னதாக வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதன்படி, முன்னதாக இதனை விசாரித்த தனி நீதிபதி தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியனின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

ஆனால இதனை எதிர்த்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியம் ஆகிய தரப்பினரால் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 'பாலசுப்பிரமணியனின் நியமனம் பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளைப் பின்பற்றியே நடைபெற்றது. ஆகவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும்.' என மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தராக பாலசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டது செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்துசெய்து உத்தரவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.