தஞ்சை மாவட்டம், தோகூரில் காவல்துறை உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் கருணாகரன் வயது (56). இவர் கடந்த 36 ஆண்டுகளாக காவலராக பணிபுரிந்து தற்போது, காவல்துறை உதவி ஆய்வாளராக தோகூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 19-ஆம் தேதி அன்று இவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று (ஆக.22) அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் உயிரிழந்த காவல்துறை உதவி ஆய்வாளர் கருணாகரனுக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், கார்த்திகேயன், பாலாஜி என இரு மகன்கள் உள்ளனர்.
இதையும் படிங்க: சொந்த ஊர் வந்தடைந்த ஆசிக்கின் உடல்!