ETV Bharat / state

அணைக்கரை காவிரி ஆற்றில் பாலத்தை இணைக்கும் பணியின்போது விபத்து! - அணைக்கரை காவிரி ஆற்றில் புதிய பாலம்

அணைக்கரை காவிரி ஆற்றில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பாலத்தை இணைக்கும் பணியின்போது கிரேன் கம்பி அறுந்ததால் பாலம் விழுந்து விபத்துக்குள்ளானது.

பாலத்தை இணைக்கும் பணியின்போது விபத்து
பாலத்தை இணைக்கும் பணியின்போது விபத்து
author img

By

Published : Jan 22, 2022, 9:08 PM IST

தஞ்சை - விக்கிரவாண்டி இடையே 165 கிலோமீட்டர் தூரம் உள்ள சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை துறை திட்டமிட்டது. இதற்கான திட்ட மதிப்பீடு கடந்த 2010ஆம் ஆண்டு தயார் செய்யப்பட்டது.

அதன்படி 2017ஆம் ஆண்டு இந்த திட்டத்திற்கு ரூ.3.517 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு நான்கு வழிச் சாலை அமைப்பதற்கான பணிகள் மூன்று பிரிவுகளாக பிரித்து கடந்த நான்கு ஆண்டுகளாக தீவிரமாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தச் சாலை பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் தஞ்சையிலிருந்து விக்கிரவாண்டி வரையிலான பயண நேரம் ஐந்து மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாகவும் குறையும் எனக் கூறப்படுகிறது.

அணைக்கரை காவிரி ஆற்றுப்பாலம்

இந்நிலையில் இரண்டாவது பிரிவில் சேத்தியாதோப்பு முதல் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் வரை ரூ.1,400 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் 34 ஆற்றுப் பாலங்களில் தஞ்சை - அரியலூர் மாவட்டத்தை இணைக்கக் கூடிய சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் உள்ள அணைக்கரை காவிரி ஆற்றுப்பாலம் ரூ.100 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. பாலம் வேலைகள் 70 விழுக்காடு நிறைவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

பாலத்தை இணைக்கும் பணி

அதன்படி பாலத்தை இணைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதற்காக காவிரியாற்றின் நடுவே கட்டப்பட்ட தூண்கள் மீது ராட்சத கிரேன் மூலம் பாலத்தின் மையப்பகுதியை தூக்கி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நேற்று (ஜன.21) நள்ளிரவு வெளிமாநிலத் தொழிலாளர்கள் 15 பேர் பாலத்தை இணைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது 12 அடி அகலம் 50 மீட்டர் நீளமுள்ள ராட்சத பாலத்தை ஸ்டன் ஜாக்கி கிரேன் மூலம் தூக்கி தூண்கள் மீது வைப்பதற்காக கொண்டு சென்றபோது, பாலத்தின் பாரம் தாங்காமல் கிரேன் கம்பி அறுந்து பாலம் கீழே விழுந்தது.

பாலம் இடிந்து சேதம்

அதனைப் பார்த்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் அவசர அவசரமாக தண்ணீரில் குதித்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதில் புதிதாக கட்டப்பட்ட தூண்களும், பாலமும் இடிந்து சேதமடைந்தன. ஆற்றில் இடிந்து விழுந்த பகுதியை அப்புறப்படுத்தும் பணியில் தனியார் கட்டுமான நிறுவனத்தின் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: UP Assembly Election: புதுக் கூட்டணி அமைத்த அசாதுதீன் ஓவைசி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.