தஞ்சாவூரில் நாளை (அக் 26) பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனின் ஆயிரத்து 35ஆம் பிறந்தநாள் சதயவிழாவாக வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது.
ஆனால், இந்த ஆண்டு கரோனா பாதிப்பு காரணமாக இரண்டு நாள்கள் நடைபெறும் திருவிழா, ஒரே நாளில் எளிய முறையில் சதய விழா கொண்டாடப்படவுள்ளது. இச் சமயத்தில், பெரிய கோயிலின் முன்பு அமைக்கப்பட்டுள்ள ராஜராஜ சோழனின் சிலைக்கு அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர். ஆனால் இந்த ஆண்டு விதிமுறைக்கு உட்பட்டு எளிய முறையில் இந்த விழா நடைபெறுவதால் அதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளை நடைபெறும் விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்தும் கோயிலின் வெளிப்புறத்தில் உள்ள ராஜராஜ சோழனின் சிலையையும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார். மேலும், பக்தர்கள் அதிகளவு கூட நேரிடும் என்பதால், தகுந்த இடைவெளியை பக்தர்கள் கடைபிடிப்பதை உறுதி செய்யவேண்டும். கோயிலுக்கு வரும் பக்தர்கள் முகக் கவசம் அணிவது கட்டாயம் என வலியுறுத்தினார். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் பத்து வயதுக்கு உட்பட்டவர்கள் யாரும் கோயிலுக்கு வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.