ஐப்பசி மாத பெளர்ணமியையொட்டி சிவ ஆலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி ராஜராஜ சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயிலிலுள்ள தஞ்சை பெருவுடையாருக்கு அன்னாபிஷேக விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்காக 1, 000 கிலோ அரிசியும், 1, 000 கிலோ காய்கனிகளையும் பக்தர்கள் வழங்கியிருந்தனர். பக்தர்கள் வழங்கிய காய்கனிகளால் லிங்கத்தை அலங்காரம் செய்து பச்சரியில் சாதம் வடித்தும் திருவுடையாருக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் பெருவுடையாருக்கு சாத்தப்பட்ட அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இது குறித்து பக்தர்கள் கூறும் போது, திருவுடையாருக்கு சாத்தப்பட்ட இந்த அன்னத்தை குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் உட்கொண்டால் குழந்தைப்பேறு ஏற்படும் என்றும், இந்த அன்னம் நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகளுக்கு உணவாகும் வகையில் அருகிலுள்ள கல்லணை கால்வாயில் கரைக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
இந்த அன்னாபிஷேக விழாவில் ஏாளமான பெண்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க : சிலைகளை மீட்டது பொன்மாணிக்கவேல் அல்ல மோடி - உயர் நீதிமன்றத்தில் அரசு வாதம்!