ETV Bharat / state

கேப்பைக் கூழ் விற்று சிலம்பம் கற்கும் மாணாக்கர் - குவியும் பாராட்டு - Sathrapatti Village, Thanjavur District

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகேயுள்ள சத்திரப்பட்டி கிராமத்தில் கேப்பைக் கூழ் விற்று சிலம்பம் பயிற்சி கற்றுவரும் மாணவ, மாணவியரை அப்பகுதி மக்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.

silampam
silampam
author img

By

Published : Mar 16, 2020, 8:44 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ளது சத்திரப்பட்டி கிராமம். இங்கு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பம், மான் கொம்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளித்துவருகின்றனர். தினந்தோறும் காலையில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொள்கின்றனர்.

இவர்களுக்கு பயிற்சி பெற்ற சிலம்பாட்ட ஆசிரியர் பயிற்சியளித்துவருகிறார். இதில் மேலும் சிறப்பு என்னவென்றால், சிலம்பம் பயிற்சி கற்க வரும் மாணவர்கள், தங்களுடைய பயிற்சிக்கு ஆகும் செலவுகளை அவர்களே ஏற்பாடு செய்துகொள்கின்றனர். இவர்கள் பெற்றோர்களைச் சார்ந்து இல்லாமல், கேப்பைக் கூழ், கம்மங் கூழ் போன்ற இயற்கை உணவுகளை கிராமப் பகுதிகளுக்குச் சென்று விற்பனை செய்துவருகின்றனர்.

அதில் கிடைக்கும் பணத்தை வைத்துக்கொண்டு சிலம்பம் பயிற்சிக்குத் தேவையான மூலப்பொருள்களை வாங்குவதற்கும், வெளியூரில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்வதற்கும் பயன்படுத்துகின்றனர்.

வறுமைக்காக இவர்கள் போராடவில்லை, அழிந்துவரும் கலையை மீட்டெடுக்க போராடுகின்றனர். இவர்களது முயற்சியைக் கண்டு வியந்துபோன அப்பகுதி மக்கள், அவர்களை ஊக்குவிக்கும்விதமாக விற்பனை செய்யும் இயற்கை உணவுகளை வாங்கி சாப்பிடுவது என முடிவெடுத்துள்ளனர்.

சிலம்பம் கற்க கூழ் விற்பனை செய்யும் மாணாக்கர்

இதன் முதல் முயற்சியாக மாணவர்களின் கூழ் விற்பனை விழா ஊர் பொதுமக்கள் முன்னிலையில் தொடங்கியது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கேப்பைக் கூழை வாங்கி ருசித்து குடித்தனர்.

இதையும் படிங்க: 'ரயில் டே' கொண்டாடிய கல்லூரி மாணவர்களிடம் விசாரணை!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.