ETV Bharat / state

துக்காச்சி கோயில் தான் 'தென் காளஹஸ்தி' என நிரூபிக்கும் 12-ஆம் நூற்றாண்டை சேர்ந்த அரிய கல்வெட்டு கண்டுபிடிப்பு! - tanjur news

சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான துக்காச்சி சௌந்தரநாயகி சமேத ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் தான் தென் காளஹஸ்தி என்று நிரூபிக்கும் 12-ஆம் நூற்றாண்டை சேர்ந்த அரிய கல்வெட்டு வரலாற்று ஆய்வு சங்க ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

துக்காச்சி கோயில் தான் 'தென் காளஹஸ்தி' என நிரூபிக்கும் 12-ஆம் நூற்றாண்டை சேர்ந்த அரிய கல்வெட்டு கண்டுபிடிப்பு!

author img

By

Published : May 27, 2023, 10:17 PM IST

துக்காச்சி கோயில் தான் 'தென் காளஹஸ்தி' என நிரூபிக்கும் 12-ஆம் நூற்றாண்டை சேர்ந்த அரிய கல்வெட்டு கண்டுபிடிப்பு!

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வரும் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 'துக்காச்சி சௌந்தரநாயகி சமேத ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்' அமந்துள்ளது. இந்த தலத்தை, 'தென் காளஹஸ்தி' என்று குறிப்பிடும் 12ஆம் நூற்றாண்டை சேர்ந்த அரிய கல்வெட்டு ஒன்று வட்ட வரலாற்று ஆய்வு சங்க ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், துக்காச்சி சௌந்தரநாயகி சமேத ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயிலில், தற்போது கும்பாபிஷேக திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கும்பகோணம் வரலாற்று ஆய்வு சங்க குழுவினர், செயலாளர் கோபிநாத் தலைமையில், அத்தலத்தில் இன்று (மே 27) களப்பணி மேற்கொள்ளப்பட்டது.

களப்பணியில், இரண்டாம் ராஜகோபுரத்தின் வாயிற்படியில் ஒரு கல்வெட்டு இருப்பதைக் கண்டறிந்த வரலாற்று ஆய்வு சங்க குழுவினர் அதில் இவ்வூரின் தொன்மையை பறைசாற்றும் வாசகம் இடம் பெற்றுள்ளதையும், கல்வெட்டில் குலோத்துங்க சோழநல்லூர், தென்திருக்காளத்தி மகாதேவர் விஜயராஜேந்திர சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்பட்டதற்கான முக்கிய சொற்றொடர்கள் இடம் பெற்றிருப்பதையும் கண்டறிந்தனர்.

மேலும் இதுகுறித்து, வட்ட வரலாற்று ஆய்வு சங்கத்தின் செயலாளர் கோபிநாத் கூறுகையில், “இந்த ஊர் முதலாம் குலோத்துங்க சோழன் (Kulottunga I) காலகட்டத்தில் 'குலோத்துங்க சோழ நல்லூர்' என்று அழைக்கப்பட்டது. அவர்களுடைய 30ஆம் ஆட்சி ஆண்டில் விஜயராஜேந்திர சதுர்வேதி மங்கலத்து சபையோர் தென்திருக்காளத்தி மகாதேவருக்கு, நிலம் தானம் கொடுக்கப்பட்டதற்கான சான்றாக இந்த கல்வெட்டு அமைந்துள்ளது.

மேலும், இந்த கல்வெட்டு தான் இந்த கோயிலை தென் காளஹஸ்தி என்று அழைக்க சான்றாக உள்ளது. ஆந்திராவில் இருப்பது வட காளஹஸ்தி மற்றும் இங்கு தமிழ்நாட்டில் இருக்கும் இந்த துக்காச்சி கோயில் தான் தென் காளஹஸ்தி என அறியமுடிகிறது” என்றும் கூறினார். இது முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் துக்காச்சியின் ஒரு பகுதியும், அருகிலுள்ள கூகூர் கிராமத்தின் ஒரு பகுதியும் இணைந்து குலோத்துங்க சோழ நல்லூர் என்ற பெயரில் இருந்துள்ளது.

இந்த பகுதியில் தான் “தென்திருக்காளத்தி மகாதேவர் கோயில்” இருந்துள்ளது என்பதற்கும் இந்த கல்வெட்டே சான்றாகும். இத்தகைய பெருமை வாய்ந்த கல்வெட்டானது பாதுகாப்பு கருதி ஊர்மக்களின் துணையுடன் கோவிலின் மகா மண்டபத்தில் தற்போது வைக்கப்பட்டுளளது. திருக்குடமுழுக்கின் போது அனைவரும் கண்டு அறியும் வண்ணம் திருச்சுற்று மாளிகைப்பகுதியில் வைக்க வேண்டும் என திருப்பணிக்குழுவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இத்தனை சிறப்பு பொருந்திய இந்த கல்வெட்டை இக்கோயிலிலேயே வைத்து பாதுகாத்து, தற்கால மற்றும் வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில், அதனை கோயில் வளாகத்திலேயே நிருவி பாதுகாத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கல்வெட்டினை படியெடுக்கும் போது சங்கத்தின் கள ஆய்வுக்குழு உறுப்பினர்களான திலீபன், சுந்தர்ராஜ், விஷால், சுரேஷ்குமார் மற்றும் துக்காச்சி கிராமவாசிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: Sengol: சோழர்களின் சொத்தா?. பாண்டியர்களின் கலை நயமா?.. தென்காசியில் ஒரு செங்கோல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.