தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் மேலக்காவேரி பகுதியில் எண்ணெய் கடை வைத்திருப்பவர் ராமமூர்த்தி. இவரது வீட்டிற்கு, இன்று திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்க வேண்டும் எனக்கூறி வந்த ஐந்து பேர் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள், திடீரென அவரது மனைவியைக் கட்டி போட்டுவிட்டு ராம என்கிற ராமமூர்த்தி வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மற்றும் காவல்துறையினர் ராமமூர்த்தியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய கும்பலைத் தேடி வருகின்றனர்.
ஆயில் கடை உரிமையாளரை எதற்காக அந்தக்கும்பல் கொலை செய்தது, முன்விரோதம் ஏதும் இருந்ததா என்பது குறித்து தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.