தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள குலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (70). விவசாயியான இவர் ஆடு, மாடு, கோழி என கால்நடைகளையும் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் மழையில் நனைந்து சிரமத்துக்கு ஆளானது. பிள்ளைகளை போல கருதி வளர்த்து வரும் ஆடுகள் மழையில் நனைந்து குளிரால் நடுங்குவதை பார்த்த கணேசன் வேதனையடைந்தார். இதனால் ஆடுகள் மழையில் நனையாமல் இருக்க அதற்கு அரிசி சாக்குகளால் 'ரெயின் கோட்' தைத்து அணிவித்து மேய்ச்சலுக்கு அனுபினார்.
இச்செயலை கண்ட அக்கம் பக்கத்தினர் கணேசனை வெகுவாக பாராட்டி வருகின்றனர். ஆடுகள் ரெயின் கோட்டுடன் மேய்ச்சலுக்கு சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ஜெயமாலா யானையை மறுவாழ்வு முகாமுக்கு அனுப்புங்கள் - பீட்டா கோரிக்கை