தஞ்சை: கும்பகோணம், பெரும் பாண்டி பகுதியில் ஆழ்வான்கோவில் தெருவில் வசித்து வந்த கார் ஓட்டுநர் தினேஷ், மே31ஆம் தேதி மாலை மர்ம நபர்களால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார்.
கொலையாளிகளை கண்டுபிடிக்க கோரி தினேஷின் உறவினர்கள் கடந்த 1ஆம் தேதி கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து விரைவில் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கார்த்திக், மணிகண்டன், விஜயகுமார், சிபிராஜ், சந்தோஷ்குமார், தருண் பாலாஜி ஆகிய ஆறு பேரை கைது செய்து மேலும் இருவரை தேடி வந்தனர். இதற்கிடையில் படுகொலையான தினேஷின் மனைவி செல்வகுமாரி (26) கடும் மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
கணவன் படுகொலை செய்யப்பட்ட ஒருசில தினங்களில் மனைவி செல்வகுமாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கும்பகோணத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே தினேஷ் படுகொலை வழக்கில் கேரள மாநிலத்தில் தலைமறைவாக இருந்த மற்றொரு குற்றவாளியான தீனா (எ) தீனதயாளனை தனிப்படை போலீசார் கைது செய்து கும்பகோணம் அழைத்துவந்து குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.
இதையும் படிங்க: பாடி பில்டர் ரத்தினம், ஈடிவி பாரத்துக்கு நன்றி