தஞ்சாவூரில் களாக்கோ கால்பந்து கழகம் சார்பில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி மூன்று நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில் கேரளா, புதுச்சேரி மாநிலத்திலிருந்தும் மற்றும் சென்னை சேலம், கிருஷ்ணகிரி, தேனி, திருச்சி, கடலூர், சிவகங்கை, திருவள்ளூர், திருப்பூர், திருவாரூர், தஞ்சை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து 40 ஆடவர் அணிகளும் 16 சிறுவர் அணிகளும் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ 20 ஆயிரம் ரொக்க பரிசும், கோப்பையும் வழங்கப்படுகிறது. மேலும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மொத்த பரிசுத் தொகையாக ரூபாய் ஒரு லட்சத்து 30 ஆயிரம் அளவில் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது. இதில் கால்பந்து வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிக்காட்டினர், அவர்களைக் கால்பந்து ரசிகர்கள் கைதட்டி உற்சாகமூட்டினர்.
இதையும் படிங்க: சிவகங்கை அருகே ரேக்ளாவில் சீறிப் பாய்ந்த காளைகள்