தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகில் உள்ள அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட சுரக்காய் கொள்ளைத் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில், திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் பரவத் தொடங்கிய, தீயானது மளமளவென பக்கத்து வீடுகளுக்கும் பரவத் தொடங்கியது.
இதையடுத்து, உடனடியாக அப்பகுதி இளைஞர்களும், பொதுமக்களும் தீயை அணைக்கப் போராடினர். இருப்பினும், தீயில் 5 வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்தத் தகவலறிந்து காவல் துறையினர், வருவாய்த் துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: காட்டிக்கொடுத்த டேப்... மாட்டிக்கொண்ட கொலையாளிகள் - காவலாளி கொலையில் துப்பு துலங்கியது எப்படி?