ETV Bharat / state

அபராதம் விதித்த போலீசாருக்கு அரிவாள் வெட்டு - சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை

சங்கரன்கோவில் அருகே தலைகவசம் அணியாமல் வந்த வாலிபருக்கு அபராதம் விதித்த போலீசை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அபராதம் விதித்த போலீசாருக்கு அரிவாள் வெட்டு

author img

By

Published : Jan 24, 2023, 3:54 PM IST

Updated : Jan 24, 2023, 4:08 PM IST

தென்காசி: சங்கரன்கோவில் காவல் உட்கோட்டம், கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவர், தமிழ்ச்செல்வன். இவரது சொந்த ஊர் மதுரை. 2009ஆம் வருடம் காவலர் பணிக்குத் தேர்வாகி பணிபுரிந்து வருகிறார். இவர் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட விருதுநகர் மாவட்ட, தென்காசி மாவட்ட எல்கையான வேலாயுதபுரத்தில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் இன்று பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது பெருமாள்பட்டியைச் சேர்ந்த காளிராஜ் என்ற இளைஞர் தலைக்கவசம் அணியாமல் வந்துள்ளார். தமிழ்ச்செல்வன் அவரை நிறுத்தி அவருக்கு அபராதம் விதித்தாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த காளிராஜ், இச்சம்பவத்தை மனதில் வைத்துக்கொண்டு குடிபோதையில் வந்து பணியில் இருந்த காவலர் தமிழ்ச்செல்வனை அரிவாளால் வெட்ட முயற்சித்துள்ளார்.

உடனடியாக, சுதாரித்துக்கொண்ட காவலர் தமிழ்ச்செல்வன் சற்று விலகவே, அவரது இடது கையில் அரிவாள் வெட்டு காயம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அரிவாளை போட்டுவிட்டு காளிராஜ் காட்டுப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டார். பின், காவலர் தமிழ்ச்செல்வன் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் கொடுத்த தகவலினை அடுத்து சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

மேலும் தப்பி ஓடிய பெருமாள்பட்டியைச் சேர்ந்த காளிராஜை பிடிக்க சங்கரன்கோவில் டிஎஸ்பி சுதிர் ஆலோசனைப்படி தனிப்படை அமைக்கப்பட்டு காளிராஜை கைது செய்து, ஓட்டி வந்த பல்சர் ரக இரண்டு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: துணிவு பட பாணியில் பட்டப்பகலில் வங்கி கொள்ளை முயற்சி.. திண்டுக்கல் இளைஞரை கைது செய்த காவல்துறை!

Last Updated : Jan 24, 2023, 4:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.