ETV Bharat / state

தென்காசியில் இளைஞர் தற்கொலை - போலீசார் விசாரணை! - tamil news

Tenkasi youth suicide: தென்காசியில் 29 வயது இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

tenkasi youth suicide
தென்காசியில் வாலிபர் தற்கொலை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2023, 8:08 AM IST

தென்காசி: தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா பகுதிக்கு உட்பட்ட தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருத்ததுரை. இவரது மகன் மாரிச்செல்வம் (29). இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று (அக.27) காலை அவரது தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் விவசாய வேலைக்காக சென்றதாகக் கூறப்படுகிறது.

பின்னர், இருவரும் நேற்று மாலை 4 மணியளவில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது, வீட்டைப் பூட்டி இருப்பதை கண்ட கருத்ததுரை தம்பதி, நீண்ட நேரம் அழைத்துள்ளனர். பின்னர் சந்தேகமடைந்த அவரது பெற்றோர், வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த போது மாரிச்செல்வம் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாரிச்செல்வத்தின் பெற்றோர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் முன் வாசல் கதவை உடைத்து உள்ளே சென்றதாகக் கூறப்படுகிறது.

stop suicide
தற்கொலையைத் தவிர்க்கவும்

அதனைத் தொடர்ந்து, தகவலறிந்து வந்த சிவகிரி போலீசார், இறந்த மாரிச்செல்வத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இறந்தவரின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த சிவகிரி போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை இளைஞர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்கள் எதுவும் தெரியவில்லை எனவும், என்ன காரணததிற்காக இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது எனவும் விசாரித்து வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: காதல் ஜோடி தப்பியோட்டம்.. காதலன் குடும்பத்தை கொளுத்திய பெண்வீட்டார்.. திருப்பத்தூரில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.