ETV Bharat / state

ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி இளைஞர் தற்கொலை முயற்சி! - இளைஞர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம்

தென்காசி: சங்கரன்கோவில் கீதாலயா திரையரங்கு சாலை பகுதியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றக்கோரி இளைஞர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி இளைஞர் தற்கொலை முயற்சி!

author img

By

Published : Jun 24, 2020, 12:32 PM IST

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கீதாலயா திரையரங்கு சாலை பகுதியில் பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. அதில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ள ஆக்கிரமிப்பு பகுதியான ஒரு தரப்பினருக்குரிய கோவிலின் முகப்பு பகுதியான உண்டியல், மணி உள்ளிட்டவற்றை ஜேசிபி இயந்திரங்களை கொண்டு இடித்து விட்டனர்.

ஆனால் அருகே இருக்கும் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றாமல் விட்டுள்ளனர். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 40க்கும் மேற்ப்பட்ட மக்கள் நேற்று (ஜூன் 23)போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கே திடிரென்று மாரியப்பன் என்ற இளைஞர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை காவல் துறையினர் தடுத்து தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.

சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் நடத்தி பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால், சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரையும் சங்கரன்கோவில் நகர காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அப்பகுதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி இளைஞர் தற்கொலை முயற்சி!
ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி இளைஞர் தற்கொலை முயற்சி!

இந்நிலையில், விரைவில் சங்கரன்கோவில் நகராட்சி பகுதிகளிலும் உள்ள அனைத்து ஆக்ரமிப்பு பகுதிகளும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகம், வருவாய் துறையினர் தெரிவித்தனர். இதேபோன்று நேற்று முன்தினமும் (ஜூன் 24) ஒருவர் மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...குற்றம் 03: உங்கள் அடையாளமும் திருடப்படலாம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.