ETV Bharat / state

அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்! - ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

தென்காசி: வி.கே.புதூர் அருகே பல ஆண்டுகளாக குடிநீர் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததைக் கண்டித்து 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Women besiege the Collector's Office demanding basic amenities!

author img

By

Published : Oct 12, 2020, 7:31 PM IST

தென்காசி மாவட்டம் வி.கே.புதூர் அருகேவுள்ள நவநீத கிருஷ்ணபுரம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இங்கு குடிநீர், சாலை வசதி, மின் வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும், பல ஆண்டுகளாக குடிநீர் பிரச்னை நிலவி வரும் நிலையில் துறை அலுவலர்களிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இதனைக் கண்டுகொள்ளாத தென்காசி சட்டப்பேரவை உறுப்பினர்கள் செல்வமோகன்தாஸ் பாண்டியனை கண்டித்தும், குடிநீர் வசதி செய்து தரக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் அவர்களைத் தடுத்துநிறுத்த முயன்ற காவல் துறையினரிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அனுப்பிவைத்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:பட்டியலின பெண்ணுக்கு ரோலிங் சேரா? - ஊராட்சித் தலைவருக்கு அச்சுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.