ETV Bharat / state

வனத்துறையினர் விசாரணையில் உயிரிழந்த விவசாயி முத்துவிற்கு நீதி கேட்டு வழக்கு!

மதுரை : சிவசைலம் வனத்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த தென்காசி விவசாயி அணைக்கரை முத்துவின் உடலை மறு உடற்கூறாய்வு செய்திட உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வனத்துறையினரின் விசாரணையில் உயிரிழந்த விவசாயி முத்துவின் மரணத்திற்கு நீதிக் கேட்டு வழக்கு!

author img

By

Published : Jul 29, 2020, 7:35 PM IST

தென்காசி மாவட்டம் வாகைக்குளம் கிராமத்தில் வசித்துவந்தவர் அணைக்கரை முத்து. மலையடிவாரத்தையொட்டி இவருக்குச் சொந்தமான காய்கறித் தோட்டத்தில் அனுமதியின்றி மின் வேலி அமைத்து இருந்ததாகக் கூறி, அவரை கடந்த 22ஆம் தேதி நள்ளிரவில் விசாரணைக்காக சிவசைலம் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாக அறிய முடிகிறது.

இவ்வாறு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அணைக்கரை முத்து, அலுவலர்களால் தாக்கப்பட்டதாக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இதனால் உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவர் தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுச் செல்லப்பட்டு, அங்கிருந்து கூடுதல் மருத்துவ உதவிக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வனத்துறையினர் விசாரணையின்போது தாக்கியதால்தான் விவசாயி அணைக்கரை முத்து உயிரிழந்ததாகக் கூறி அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கடையம் வாகைக்குளம் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இது தொடர்பாக அவரது மனைவி பாலம்மாள் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், "விசாரணைக்காக அழைத்துச் சென்ற கணவர் தாக்கப்பட்டதன் காரணமாகவே உயிரிழந்தார். ஆகவே, கணவரின் உடலை தடயவியல் மருத்துவர்கள் குழு உடற்கூறாய்வு செய்யவும், தொடர்புடைய அலுவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவும், வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றவும், உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என முறையிட்டுள்ளார்.

இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நீதிபதி பொங்கியப்பன் முன்பாக விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், " உயிரிழந்த விவசாயி முத்துவின் உடற்கூராய்வு அறிக்கையின் படி அறிக்கையின்படி, அவரது உடலில் 18 இடங்களில் காயங்கள் இருந்தது. வனத்துறை அலுவலர்களின் விசாரணையில் தாக்கப்பட்டே அவர் உயிரிழந்தற்கான ஆதாரமாகவே இதனை நாம் கருத வேண்டும்" என வாதிட்டார்.

இதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு வழக்குரைஞர், "சட்டம்-ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர், கேட்டு கொண்டதன் பேரில் அம்பாசமுத்திரம் மாஜிஸ்திரேட்டிற்கு தகவல் அளித்து விட்டு தான் உடற்கூராய்வு பரிசோதனை செய்யப்பட்டது" என்றார்

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கின் விசாரணையை நாளை ஒத்திவைப்பதாக உத்தரவிட்டார்.

விவசாயி அணைக்கரை முத்து மரணம் குறித்து உயர் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டு, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென அனைத்து அரசியல் கட்சியினரும், பொதுநல அமைப்பினரும் வலியுறுத்திவருவது கவனிக்கத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.