ETV Bharat / state

விண்ணில் பறந்த கிராமத்துப் பெண்கள் - ஆசையை நிறைவேற்றிய மகளிர் சுய உதவிக் குழுத் தலைவர் - village women traveled flight with the help of women's self Help Group

குடும்பத்தினரால் நிறைவேற்ற முடியாத ஆசையை மகளிர் சுய உதவிக் குழு மூலம் நிறைவேற்றி காட்டிய பெண்... கிராமத்துப் பெண்களை விண்ணில் பறக்கவைத்து சாதித்தது எப்படி? வியப்பூட்டுகிறார் மகளிர் சுய உதவிக் குழுத் தலைவர்.

கிராமத்து பெண்கள் ஆசையை நிறைவேற்றிய மகளிர் சுய உதவி குழு

author img

By

Published : Feb 18, 2022, 6:17 PM IST

தென்காசி: கிராமத்துப் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகக் கொண்டுவரப்பட்டதுதான் மகளிர் சுய உதவிக் குழுக்கள். ஆனால் பெரும்பாலான கிராமங்களில் இக்குழுக்கள் சரிவரச் செயல்படுவதில்லை, குழு சார்பில் வழங்கப்படும் கடனை உறுப்பினர்கள் முறையாகக் கட்டாததால் பல குழுக்கள் நஷ்டத்தில் இயங்கிவருகின்றன.

இதுபோன்ற சூழ்நிலையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கல்லூத்து என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 20 ஆண்டுகளாக மகளிர் சுய உதவிக்குழுவை லாபகரமாக நடத்திவருவதுடன் தனது உறுப்பினர்களை வானில் பறக்கவைத்து சாதனைபுரிந்துள்ளார்.

அதாவது கல்லூத்து கிராமத்தில் சிவகாமி, அன்னை தெரசா, அன்னை இந்திரா ஆகிய மூன்று மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டுவருகின்றன. மெர்சி என்ற பெண் இக்குழுக்களை வழிநடத்திச் செல்கிறார். குழுவில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் பீடி சுற்றுதல், விவசாய வேலை செய்யும் கூலித்தொழிலாளிகள் குழு சார்பில் வழங்கப்படும்.

கடன்களை உறுப்பினர்கள் முறையாகக் கட்டிவருவதால் 20 ஆண்டுகளாக மூன்று குழுக்களும் லாபத்தில் இயங்குகின்றன. குளறுபடிகளைத் தடுக்க ஆண்டுதோறும் தணிக்கை செய்து வரவு செலவுக் கணக்குகளை முறையாகப் பராமரிக்கின்றனர்.

குழுவில் உள்ள லாபத் தொகை மூலம் மெர்சி ஆண்டுதோறும் உறுப்பினர்களை சுற்றுலா அழைத்துச் செல்வது வழக்கம். கடந்தாண்டு மதுரை சென்றபோது விமான நிலையம் அருகே விமானம் பறப்பதை உறுப்பினர்கள் வியப்புடன் ரசித்துள்ளனர்.

ஒருமுறையாவது விமானத்தில் பறக்க வேண்டும் என அனைவரும் தெரிவித்துள்ளனர். இதை தனது மனத்தில் ஆழமாகப் பதித்துக்கொண்ட மெர்சி, அடுத்த ஆண்டு எப்படியாவது தனது உறுப்பினர்களை விமானத்தில் அழைத்துச் செல்ல வேண்டும் என எண்ணியுள்ளார்.

அவரது எண்ணம்படி இந்த ஆண்டு குழுவில் அதிக லாபம் கிடைத்துள்ளது. எனவே அந்தத் தொகையை வைத்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே மெர்சி தனது குழுவைச் சேர்ந்த 34 பெண்களுக்கு மதுரையிலிருந்து சென்னை செல்ல விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்.

திட்டமிட்டபடி கடந்த 3ஆம் தேதி மெர்சி தலைமையில் அனைவரும் மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் சென்றுள்ளனர். இதுவரை விமானத்தைக் கண்ணால் மட்டுமே பார்த்து ரசித்த பெண்களுக்கு விமானத்தின் உள்ளே நுழைய வாய்ப்பு கிடைத்ததில் பெருமகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

மேலும், மகிழ்ச்சியாக சென்னையில் இறங்கியவுடன் மெட்ரோ ரயிலிலும் அனைவரையும் பயணிக்க வைத்துள்ளார். சென்னையில் எழும்பூர் அரசு அருங்காட்சியகம், மெரினா கடற்கரை ஆகிய இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு நேற்று (பிப்ரவரி 17) அனைவரும் ஊர் திரும்பினர்.

பொதுவாக இதுபோன்று குழுவை வழி நடத்திச் செல்வதே பெரும் சவாலாக இருக்கும் நிலையில் குழுவைச் சேர்ந்த கிராமத்துப் பெண்களை விமானத்தில் பறக்கவைத்து சாதித்தது எப்படி என்பது குறித்து மெர்சியிடம் கேட்டபோது,

விண்ணில் பறந்த கிராமத்து பெண்கள்

“எங்கள் குழுவைச் சேர்ந்த பெண்கள் வாங்கிய கடன்களை முறையாகக் கட்டிவிடுவார்கள். அதனால், கடந்த 20 ஆண்டுகளாகக் குழு லாபத்தில் இயங்கிவருகிறது. கடந்தாண்டு மதுரை சென்றபோது மதுரையில் விமானத்தை ரசித்துப் பார்த்தனர்.

எனவே எப்படியாவது அவர்களை விமானத்தில் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற எனது ஆசை நிறைவேறியது. அடுத்த ஆண்டு விமானத்தில் வெளிமாநிலங்களுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளேன். குழுவில் வரவு-செலவு கணக்குகளை முறையாகப் பராமரிக்கிறோம்” என்றார்.

கிராமத்துப் பெண்கள் ஆசையை நிறைவேற்றிய மகளிர் சுய உதவி குழு

இது குறித்து விமானத்தில் சென்ற பெண்கள் கூறுகையில், “நாங்கள் சிறு வயதிலிருந்தே விமானத்தை வானில் மட்டும்தான் பார்த்துள்ளோம். எப்படியாவது விமானத்தில் செல்ல வேண்டுமென்று ஆசைப்பட்டோம்.

எங்கள் குடும்பத்தில்கூட யாரும் எங்களை அழைத்துச் செல்லவில்லை. மகளிர் சுய உதவிக்குழு மூலம் விமானத்தில் செல்ல வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாகவுள்ளது” எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சமந்தாவின் அரபிக் குத்து..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.