ETV Bharat / state

தென்காசி அருகே சொத்து தகராறில் வழக்கறிஞர் வெட்டி படுகொலை!

ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தைச் சேர்ந்த இருவர் சொத்து தகராறு காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ashok kumar
வழக்கறிஞர் அசோக்குமார்
author img

By

Published : Jun 30, 2023, 1:28 PM IST

Updated : Jun 30, 2023, 2:50 PM IST

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் அசோக் குமார் (28). இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். மேலும், இவரது பெரியப்பா துரைராஜ் (55). இவர்களின் உறவினர்கள் இடையே சொத்து தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கறிஞர் அசோக் குமாரின் விவசாய நிலங்களை சேதப்படுத்தியதோடு, அவரையும் அவரின் உறவினர்களையும் மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. முன்னதாக, வழக்கறிஞர் அசோக் குமார் மற்றும் அவரது பெரியப்பா துரைராஜ் ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர்.

அப்போது அவர்களது வீட்டில் புகுந்த சில மர்ம நபர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே வழக்கறிஞர் அசோக் குமார் உயிரிழந்தார். மேலும், படுகாயம் அடைந்த துரைராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். ஆனால், அவர் அங்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

இதையும் படிங்க: மகளின் காதலனை கொலை செய்ய தந்தை திட்டம்.. 6 பேர் சிக்கியது எப்படி?

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன், சம்பவ இடத்திற்கு வந்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட அசோக் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக ஆலங்குளம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பின்னர் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், இவர்களது உறவினரான ராணுவ வீரர் சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து அசோக் குமார் மற்றும் அவரது பெரியப்பா துரைராஜ் ஆகிய இருவரையும் வெட்டி படுகொலை செய்தது தெரிய வந்தது.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 4 நபர்களை ஆலங்குளம் காவல்துறையினர் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான ராணுவ வீரர் சுரேஷை கைது செய்யாதது, வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தென்காசி புது நீதிமன்றம் எதிரே உள்ள திருநெல்வேலி- தென்காசி நெடுஞ்சாலையில் வழக்கறிஞர்கள் தற்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், வழக்கறிஞரை கொலை செய்த ராணுவ வீரரை உடனடியாக கைது செய்ய வேண்டும், இது போன்ற செயல்கள் இனிமேல் நடைபெறாத வண்ணம் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்து வரும் சூழலில் வழக்கறிஞர்களில் தற்போதைய இந்த சாலைமறியல் போராட்டத்தால் தென்காசி-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நாகசங்கர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனிடையே, இரவு நேரத்தில் வீட்டில் இருந்தவரை சொத்துத் தகராறு காரணமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் ஆலங்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: Mark Shand: இங்கிலாந்தின் ‘மார்க் ஷண்ட்’ விருதைப் பெற்ற நீலகிரி பழங்குடியினர் - எதற்காக தெரியுமா?

Last Updated : Jun 30, 2023, 2:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.