தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் முகமது ராஜாவை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பரப்புரையில் பேசிய அவர், "தமிழ்நாட்டில் திமுகவிற்கு ஆதரவாக சுனாமி போன்ற பெரும் அலை வீசுவதாக ஸ்டாலின் கூறிவருகிறார்.
சுனாமி அலை மக்களுக்கு நல்லதை விளைவிக்காது, அழிவை ஏற்படுத்தும். மேலும் திமுகவினர் ஆட்சிக்கு வந்தால் வியாபாரிகள் சரிவர வியாபாரம் செய்ய முடியாது.
கட்டப் பஞ்சாயத்துகள் நடக்கக்கூடும். தமிழ்நாட்டின் நிம்மதி பறிபோகும். ஆளுங்கட்சி சார்பில் ஆடு, மாடுகளை விலைக்கு வாங்குவதுபோல் வாக்குக்கு பணம் கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்க முயற்சிப்பார்கள். அதற்கு இடம் கொடுக்க வேண்டாம்" எனத் தெரிவித்தார்.