ETV Bharat / state

தென்காசி காய்கறி சந்தையை மீண்டும் திறக்க கோரிக்கை! - காய்கறி சந்தை

தென்காசி: கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக கடந்த ஆறு மாத காலமாக மூடப்பட்டிருக்கும் காய்கறி தினசரி சந்தையை மீண்டும் திறக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Traders demand reopening of Tenkasi vegetable market

author img

By

Published : Sep 19, 2020, 10:04 PM IST

தென்காசி மாவட்டத்தில், கரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான தினசரி சந்தை கடந்த 6 மாதங்களாக பூட்டப்பட்டுள்ளது.

இங்குள்ள வியாபாரிகள் பாதிக்கப்படாதவாறு அவர்களுக்கு பழைய பேருந்து நிலையத்தில் இடம் ஒதுக்கப்பட்டு வியாபாரத்திற்கு அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் இயங்க அனுமதிக்கப்பட்டிருப்பதால் பயணிகள் வருகையும், காய்கறிகள் வாங்க வருபவர்களும் ஒரே இடத்தில் கூடுவதால் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் தகுந்த இடைவெளியும் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து தினசரி சந்தை வியாபாரிகள் கூறுகையில், "தென்காசி தினசரி சந்தையில் 100-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன.

கரோனா தொற்று பரவல் காரணமாக இந்தத் தினசரி சந்தையானது மூடப்பட்டு பழைய பேருந்து நிலையத்திலும், தெருவோரத்திலும் வியாபாரிகள் வியாபாரம் செய்துவருகின்றனர்.

ஆனால் இந்த வியாபாரம் போதுமான அளவு கை கொடுக்கவில்லை. தமிழ்நாடு அரசு ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

எனவே தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் தென்காசி காய்கறிச் சந்தை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு தினசரி சந்தையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.