ETV Bharat / state

தொடர் விடுமுறை: குற்றாலத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்!

தொடர் விடுமுறை தினத்தையொட்டி குற்றாலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

tourists-flock-to-kurthalam-on-the-occasion-of-todai-holiday
தொடர் விடுமுறையையொட்டி குற்றாலத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2023, 2:39 PM IST

தென்காசி மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து வெகுவாக அதிகரித்தது உள்ளது .

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் சீசன் களைகட்டும். இந்த காலங்களில் மெயின் அருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டும். இதில் குளிப்பதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.

இந்த ஆண்டும் சீசன் காலம் முடிந்த பிறகும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்து அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும், பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை, மிலாடி நபி, காந்தி ஜெயந்தி, வார இறுதி நாட்கள் போன்ற தொடர் விடுமுறையை முன்னிட்டு குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

நேற்று காலை இருந்தே விட்டு விட்டு மழை பெய்ததால் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. மேலும் பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் கொட்டியதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து உள்ளதால் இன்று (அக். 2) காலை தடை நீக்கப்பட்டது. இதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் ஆரவாரத்துடன் குற்றால அருவிகளில் குளித்தது வருகின்றனர்.

இதையும் படிங்க: பிடி உஷாவின் 40 ஆண்டுகால சாதனை சமன்! ஆசிய விளையாட்டில் ஜொலிக்கும் தமிழக வீராங்கனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.