தென்காசி: குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவியில் திங்கள்கிழமை (ஏப். 25) முதல் 24 மணிநேரமும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இந்த சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல குற்றாலத்தில் உள்ள கடை வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கரோனா பரவல் படிப்படியாக குறைந்துவருவதால், சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதேபோல் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளுக்கும், நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை மட்டுமே அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் 24 மணிநேரமும் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.
இதையும் படிங்க: 'மாமல்லபுரத்தில் கடல் அரிப்பால் வெளிப்பட்ட கோவில்'